வைரம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?
வாயேஜர் பயணிகள்
சுண்ணாம்பு பாறை (Limestone)
சிகரங்கள்
அடர்ந்த காடு
கண் காணாத உலகில்
ஈஸ்டர் தீவு
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு
தீவுகளின் விலங்குகள் (Island Animals)
4ஜி அலைவரிசை
தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்
உலக பூமி நாள் விழிப்புணர்வு
மண்ணின் மைந்தர்கள்
தீவுகள்
சைபர் தீவிரவாதம்
ஆழ்கடல் வெந்நீர் ஊற்று
ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்
குந்தி தின்றால் குன்றும் கரையும்
உலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்
ஆழ் கடல்
நம்மைக் காக்கும் ’நுண்பாதுகாவலர்கள்’
கடல் நீரோட்டங்கள்
கடல்
ஆன்ட்ராய்டு
வளிமண்டலம்
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
பாழ் படும் பால்
பாலைவனம்
ஜீன் திருட்டு
நாட்டியமாடும் இந்தியத் தவளை
டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்
புல்வெளிகள்
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
கடற்கரை
பவள பாறைகள்
வறண்ட நிலம்
சூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்
பூமியின் வட்டப்பாதை
அணை கட்டும் அதிசய உயிரினம்
பூமியின் அச்சு
அழிவின் பாதையில் கழுகுகள்
கனிம எண்ணெய்
கவசம் அணிந்த விலங்கு
உயிர் என்றால் என்ன
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
டார்வின் மற்றும் வாலஸ்
காலு நதியும், மினமாட்டா கடலும்…
எல் நினோ
வேகமான காற்றலை - 47
மாற்று உபகரணம்
30th Mar 2019
நீர் பூமியின் எல்லா உயிரினங்களுக்கும் மிக அடிப்படையாக தேவைப்படும் ஒரு பொருள். ஆனால் எல்லா இடங்களிலும் நீர் எப்போதும் எளிதில் கிடைப்பதில்லை. மழை இல்லாமையால் நீர் வளங்கள் மிக அபூர்வமானதாகிவிடும். இவ்விடங்கள் உயிர் வாழ தகுதியற்றது போன்று காட்சியளிக்கும். இவை தான் வறண்ட நிலம்.
மழை வருவதற்காக பல உயிரினங்கள் பல வாரங்கள் மற்றும் மாதங்கள் காத்து கொண்டு இருக்கும். மழை வரும் நேரத்தை கணித்து விலங்குகள் அவைகள் தங்கள் அடுத்த தலைமுறை குட்டிகளை இடும். புதிய தலைமுறை பிறந்ததும் மழை பொழிந்து எல்லா இடமும் செழிப்பாக இருக்கும். இந்த செழிப்பு புதிய தலைமுறை பிறந்ததும் ஒரு இனிப்பான மற்றும் செழிப்பான காலமாக அமையும்.
மழை பொழிந்தால் தாவரங்கள் செழித்து வளரும். ஆடு, மாடு, எருமை, மான், முயல், அணில் போன்ற எல்லா தாவர உண்ணி விலங்குகளுக்கும் இந்த காலம் ஒரு வரப்பிரசாதம். அடுத்த தலைமுறை கன்றுகள் இப்போது தான் பிறந்திருக்கும்.
ஆண்கள் மற்ற ஆண்களுடன் போட்டியிட்டு எது சிறந்த ஆண் என்பதை தேர்ந்து எடுக்கும். ஒவ்வொரு விலங்கும் வெவ்வேறு வகையில் பெண்களை கவரும். ஆண் மயில் அதன் தோகையை விரித்து ஆடி பெண் மயில்களை கவருவதுபோன்று பல விலங்குகள் வெவ்வேறு தந்திரங்களை பயன்படுத்தி பெண்களை கவரும். சில ஆடும், சில பாடும், சில அழகு பொருட்களை சேகரிக்கும் மற்றும் சில சண்டையிடும். ஆண் மான்கள் சண்டையிடத்தான் அதற்கு கொம்புகள் உள்ளது. சில உயிரினங்களில் பெண்கள் போட்டியிட்டு ஆண்களை தேர்ந்தெடுக்கும்.
மழை பொழிவதால் தாவரம் உண்ணும் விலங்குகளுக்கு நிலம் சொர்க்க பூமியாக மாறினாலும், மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு இது ஒரு கஷ்ட காலம். வறண்ட காலங்களில் ஆங்காங்கே சிறு குளங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும். சூரியனின் வெப்பம் அங்கு இருக்கும் தண்ணீரையும் ஆவியாக்கும். ஒவ்வொரு குளமும் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக்கொண்டு வரும். கடைசியில் அடுத்த மழை வரும்வரை ஒருசில குளங்கள் மட்டுமே தான் இருக்கும். எல்லா விலங்குகளும் இந்த கடைசி சிறு சிறு குளங்களில் தண்ணீர் குடிக்க வந்து தான் தீரவேண்டும்.
ஆனால் இந்த கடைசி குளங்களில் தண்ணீர் குடிப்பது சுலபம் அல்ல. தாவரம் உண்ணும் விலங்குகள் அவர்கள் வாழ்க்கையில் துணிந்து செய்யவேண்டிய அபாயமான வேலை இந்த கடைசி குளங்களில் தண்ணீர் குடிப்பது தான். இங்கு தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை வேட்டையாட சிங்கம், புலி, சிறுத்தை, காட்டு நாய், முதலை போன்ற எல்லா மாமிசம் உண்ணும் விலங்குகளும் இந்த குளங்களை சுற்றி ரோந்து வரும்.
இந்த கடைசி குளங்கள் இருக்கும் காலம், மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு ஒரு வசந்த காலம். இவை பிற விலங்குகளை வேட்டையாட வேறு இடங்களுக்கு தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த கடைசி குளங்களை சுற்றி இருந்தால் போதும், உணவு இவைகளை தேடி வரும். சிங்கம், புலி போன்ற காட்டின் பெரும் வேட்டைக்காரர்கள் இந்த காலத்தின் துவக்கத்தில் குட்டிகளை இடும். அந்த குட்டிகளுக்கு உணவு எப்போது வேண்டுமென்றாலும் கிடைக்கும். வேட்டையாடுவது இக்காலத்தில் மிக எளிது.
இந்த விலங்குகளிடம் இருந்து தப்பிக்க தாவரம் உண்ணும் விலங்குகள் கூட்டம் கூட்டமாக தான் தண்ணீர் அருந்த வரும். கூட்டங்களில் பாதுகாப்பு உள்ளது. யானை போன்ற மிக பெரிய விலங்குகள் வரும் நேரத்தில் வந்தால், யானைகளை கண்டு பயந்து வேட்டையாடும் விலங்குகளில் பல ஒதுங்கிவிடும். இப்படி எப்போது தண்ணீர் அருந்த வேண்டும், எப்போது அருந்தக்கூடாது என்று ஒவ்வொரு விலங்குக்கும் தெரிய வேண்டும். இந்த தந்திரம் தெரியாத விலங்குகள் அந்த வறண்ட காலத்தை உயிருடன் கடக்காது.
இந்த வறண்ட காலம் நிலைப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் மழை காலம் கண்டிப்பாக வரும். எல்லா பாலைவனங்களில் கூட மழை பொழிகிறது. மழை வந்ததும் தாவரங்களை உண்ணும் விலங்குகள் சிதறிவிடும். இனிமேல் அவை குளங்களுக்கு தண்ணீர் அருந்த வராது. மாமிசம் உண்ணும் விலங்குகள் காட்டினுள் சென்று கஷ்டப்பட்டு வேட்டையாட வேண்டும். மாமிசம் உண்ணும் விலங்குகளின் வசந்தகாலம் முடிந்துவிட்டது. இனி அடுத்த வருடம் தான் வறண்ட காலம் வரும்.
இப்படி ஒவ்வொரு வருடமும் வறண்ட காலமும் மழை காலமும் மாறி மாறி வரும். இந்த காலங்களை சரியாக பயன்படுத்தி வெவ்வேறு விலங்குகள் வாழ்கிறது. எப்போது சரியான எதிர் பாலினத்தை தேர்ந்து எடுக்க வேண்டும், எப்போது இனச்சேர்க்கை செய்யவேண்டும், போன்ற அனைத்தும் சரியான காலத்தில் நடத்தினால் தான் சரியான காலத்தில் அடுத்த தலைமுறை குட்டி செழிப்பாக வளரும் வாய்ப்பு கிடைக்கும். காலங்களை கணிப்பது ஒவ்வொரு விலங்கிற்கும் அடிப்படையாக தேவைப்படும் திறன். தவறாக கணித்தால், அடுத்த தலைமுறைக்கு சரியான ஆரம்பம் கிடைக்காது. எளிதில் பல குட்டிகள் இறக்க வாய்ப்பு உள்ளது.
சில வேளைகளில் அவைகள் கணித்ததற்கு முன்பாகவே மழை பொழிந்துவிடும், அல்லது வெப்பம் அதிகரித்துவிடும். இப்படி நடந்தால் குட்டிகளுக்கு தேவையான ஆரோக்கியம் வருவதற்கு முன்பாகவே சரியான சூழ்நிலை முடிந்துவிடும். அப்போது பிறந்த குட்டிகளுக்கு சரியான உணவு கிடைக்காது. அந்த வருடத்தில் குட்டிகள் பிழைப்பது கஷ்டம்.
வறண்ட காலத்தில் வாழ்வது கடினம் தான். ஆப்பிரிக்காவில் உள்ள சில குளங்களில் நுரையீரல் உள்ள மீன்கள் உள்ளது. வறண்ட காலத்தில் குளத்தில் தண்ணீர் வற்றியதும் அவைகளின் செவுள்கள் செயலிழந்து நுரையீரல் செயல்படும். மண்ணின் கீழ் ஒரு களிமண் பந்து போன்று மாறி தூங்கிவிடும். மழை வந்து தண்ணீர் வந்ததும் மறுபடியும் மீனாக மாறிவிடும்.
வறண்ட காலத்தை செழிப்பாக பார்க்கும் மாமிசம் உண்ணும் விலங்குகளின் குட்டி ஒரு ஆண்டு தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பு, மழை காலத்தை செழிப்பாக பார்க்கும் தாவரம் உண்ணும் விலங்கு குட்டி ஒரு ஆண்டு தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பைவிட 7 மடங்கு குறைவு. வேட்டையாடும் விலங்குகள் தான் வேட்டையாடப்படும் விலங்குகளைவிட மிக அதிகமாக உழைக்கும் விலங்கு. எப்போதும் உணவுக்கான தேடல் இருந்துகொண்டே தான் இருக்கும். நம் மூதாதையர்கள் வேட்டையாடும் கலாச்சாரத்தில் இருந்ததால் நம் அறிவு மிக அதிகமாக பரிணாமத்தில் வளர்ந்திருக்கலாம் என்று பல பரிணாம நிபுணர்கள் கருதுகின்றனர்.
இன்னும் சில வேளைகளில் கடைசியாக இருக்கும் குளமும் வற்றிவிடும். குடிக்க இருக்கும் கடைசி தண்ணீரும் போய்விடும். இது புது சவால்களை கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் பூமி அதிகமாக வெப்பமாவதால் இந்த சூழ்நிலை அதிகமாக நிலவுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளில் உள்ள சிங்கங்களுக்கு இந்திய அரசாங்கம் தண்ணீர் தொட்டிகளை காட்டினுள் கட்டி, தினமும் தண்ணீர் நிரப்பி வருகிறது. இதை போன்று மனிதர்களின் உதவியால் பல வறண்ட காலங்களில் பல விலங்குகள் தப்பிக்கின்றன. பூமியின் எல்லா விலங்குகளும் இன்று மனிதனை நம்பி இருக்கிறது.
ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பாலைவன சிங்கங்கள் உள்ளது. உலகின் மிக கடுமையாக உழைக்கும் விலங்குகளில் அவைகள் ஓன்று. ஆனால் அங்கு தண்ணீர் தேங்கும் குளங்கள் அதிகமாக கிடையாது. இருக்கும் இடங்களிலும் பாலைவன யானைகளின் ஆதிக்கம் தான் உள்ளது. அந்த மிக கடின சூழ்நிலையில் கூட அந்த விலங்குகள் வாழ்கிறது.
மிகவும் வறண்ட காடுகள் மிக தனித்துவமான உயிரினங்களை பரிணாமம் மூலமாக உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் உப்பு பாலைவனமான கட்ச்சேரியின் ரான் (The Great Rann of Kutch) குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…
வைரம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?
வாயேஜர் பயணிகள்
சுண்ணாம்பு பாறை (Limestone)
சிகரங்கள்
அடர்ந்த காடு
கண் காணாத உலகில்
ஈஸ்டர் தீவு
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு
தீவுகளின் விலங்குகள் (Island Animals)
4ஜி அலைவரிசை
தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்
உலக பூமி நாள் விழிப்புணர்வு
மண்ணின் மைந்தர்கள்
தீவுகள்
சைபர் தீவிரவாதம்
ஆழ்கடல் வெந்நீர் ஊற்று
ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்
குந்தி தின்றால் குன்றும் கரையும்
உலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்
ஆழ் கடல்
நம்மைக் காக்கும் ’நுண்பாதுகாவலர்கள்’
கடல் நீரோட்டங்கள்
கடல்
ஆன்ட்ராய்டு
வளிமண்டலம்
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
பாழ் படும் பால்
பாலைவனம்
ஜீன் திருட்டு
நாட்டியமாடும் இந்தியத் தவளை
டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்
புல்வெளிகள்
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
கடற்கரை
பவள பாறைகள்
வறண்ட நிலம்
சூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்
பூமியின் வட்டப்பாதை
அணை கட்டும் அதிசய உயிரினம்
பூமியின் அச்சு
அழிவின் பாதையில் கழுகுகள்
கனிம எண்ணெய்
கவசம் அணிந்த விலங்கு
உயிர் என்றால் என்ன
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
டார்வின் மற்றும் வாலஸ்
காலு நதியும், மினமாட்டா கடலும்…
எல் நினோ
வேகமான காற்றலை - 47
மாற்று உபகரணம்
வைரம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
சுண்ணாம்பு பாறை (Limestone)
சிகரங்கள்
அடர்ந்த காடு
ஈஸ்டர் தீவு
தீவுகளின் விலங்குகள் (Island Animals)
தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்
தீவுகள்
ஆழ்கடல் வெந்நீர் ஊற்று
ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்
ஆழ் கடல்
கடல் நீரோட்டங்கள்
கடல்
வளிமண்டலம்
பாலைவனம்
டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்
புல்வெளிகள்
கடற்கரை
பவள பாறைகள்
வறண்ட நிலம்
பூமியின் வட்டப்பாதை
பூமியின் அச்சு
கனிம எண்ணெய்
உயிர் என்றால் என்ன
டார்வின் மற்றும் வாலஸ்
எல் நினோ
வேகமான காற்றலை - 47
வைரம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
சுண்ணாம்பு பாறை (Limestone)
சிகரங்கள்
அடர்ந்த காடு
ஈஸ்டர் தீவு
தீவுகளின் விலங்குகள் (Island Animals)
தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்
தீவுகள்
ஆழ்கடல் வெந்நீர் ஊற்று
ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்
ஆழ் கடல்
கடல் நீரோட்டங்கள்
கடல்
வளிமண்டலம்
பாலைவனம்
டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்
புல்வெளிகள்
கடற்கரை
பவள பாறைகள்
வறண்ட நிலம்
பூமியின் வட்டப்பாதை
பூமியின் அச்சு
கனிம எண்ணெய்
உயிர் என்றால் என்ன
டார்வின் மற்றும் வாலஸ்
எல் நினோ
வேகமான காற்றலை - 47
Copyright © 2018 Amudam Monthly Magazine